தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க குடிநுழைவு நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ளும்படி வெளியுறவு அமைச்சு வலியுறுத்து

1 mins read
2c4e7bb2-a232-4ea5-b0e2-ee1e4b452b82
அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தேவைப்படும் ஆவணங்களைப் பற்றி ஆக அண்மைத் தகவல்களைச் சிங்கப்பூர் மாணவர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளலாம் என்று வெளியுறவு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், அண்மைய நிலவரங்களைத் தெரிந்துகொள்ள அங்குள்ள சிங்கப்பூர்த் தூதரகங்களுடன் தொடர்பில் இருக்கும்படி வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், அதிகாரபூர்வ விசா நுழைவுக்கான நிபந்தனைகளுக்கு உடன்படும்படி சிங்கப்பூர் கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தேவைப்படும் ஆவணங்களைப் பற்றி ஆக அண்மைத் தகவல்களைச் சிங்கப்பூர் மாணவர்கள் தெரிந்துவைத்துக்கொள்ளலாம் என்று வெளியுறவு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தது.

அனைத்துலக மாணவர் சேவைகளுக்கான அலுவலகங்களுடன் தொடர்பில் இருக்கும்படி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையங்களின் மாணவர்ச் சேவை அலுவலகங்களுடன் தொடர்பில் இருந்து அனைத்துலக விசா நிபந்தனைகள் பற்றிய அண்மை மாற்றங்களைத் தெரிந்துகொள்ளும்படியும் அமைச்சு ஊக்குவித்துள்ளது.

கடந்த சில நாள்களில் அனைத்துலக மாணவர்களுக்கான விசா நிபந்தனைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குடிநுழைவில் டிரம்ப் நிர்வாகம் கையாண்டு வரும் கெடுபிடியான அணுகுமுறையின் ஓர் அங்கமாக இது உள்ளது.

மாணவர்ப் பல்கலைக்கழக பரிமாற்றத் திட்டங்களுக்கான விசா விண்ணப்பங்களுக்குப் புதிதாக முன்வருவோருக்கு நேரத்தை ஒதுக்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இந்த வாரத்தின் முற்பகுதியில் கூறினார்.

அமெரிக்காவுக்குள் நுழைவோரின் சமூக ஊடகக் கணக்கை விரிவாக சோதனை செய்வதற்கான வழிமுறைகளை வெளியிடவும் அமெரிக்கா திட்டமிடுகிறது.

குறிப்புச் சொற்கள்