கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி திட்டங்கள் குறித்து அமைச்சு ஆலோசனை வழங்கியது

கில்மன் பேரெக்ஸ், மாஜு வனப்பகுதி திட்டங்கள் குறித்து அமைச்சு ஆலோசனை வழங்கியது

2 mins read
bb9c0ec9-5a74-4eb9-81a0-1d7df5877e76
கில்மன் பேரெக்ஸ். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

கில்மன் பேரக்ஸ் மற்றும் மாஜு வனப் பகுதிக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு தனது கருத்துகளைத் தெரிவித்ததாக, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) பாட்டாளிக் கட்சியின் கென்னத் தியோங்கிற்கு (அல்ஜுனிட் குழுத் தொகுதி) பதிலளித்த திரு டான், பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றியதாகக் கூறினார்.

2026ஆம் ஆண்டு பருவநிலை தழுவல் ஆண்டாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கில்மன் பேரக்ஸ் மற்றும் மாஜு வனப் பகுதிக்கு அருகிலுள்ள காடுகளுக்காக அமைச்சு ஏன் முன்னின்று செயல்படவில்லை என்று திரு தியோங் கேள்வி எழுப்பியிருந்தார்.

காடுகள் தொடர்பான முடிவுகளில் அமைச்சிடம் தலைமைத்துவமும் பொறுப்புணர்வும் இல்லை என்று தாங்கள் கருதுவதால், சில இயற்கை ஆய்வாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகத் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு குறித்த தியோங்கின் சித்திரிப்புடன் டான் உடன்படவில்லை. மேலும் அரசாங்கம் பல்வேறு அமைச்சுகள் மூலம் முடிவுகளை எடுக்கிறது என்றும் கூறினார்.

“இறுதியில், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மேலும் தியோங்கிற்குப் பதிலளித்த, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, தமது அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சிடமிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து, அதன் சில முடிவுகளை எதிர்த்து வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற பாட்டாளிக் கட்சியின் பரிந்துரை, ‘ஓர் அரசாங்கமாக நாங்கள் செயல்படும் விதம் அல்ல’ என்று கூறினார்.

“இங்கு முன்னால் நின்று அரசாங்கத்திடம் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கும் நம்மில் ஒருவருக்கு, நாங்கள் அனைவரும் ஆதரவளிக்கிறோம். எனவே, ஒரு பாட்டாளிக் கட்சி உறுப்பினர் அமைச்சர்களுக்கு இடையே ஒரு மோதலை எதிர்பார்த்தால், அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

பருவநிலைத் தழுவலுக்காக ஓர் ஆண்டை ஒதுக்குவதன் நோக்கம், நீண்டகால பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு திட்டமிடல் செய்யப்படுவதை உறுதி செய்வதே தவிர, அரசாங்கம் ஒரு குழுவாகத் திறம்படச் செயல்பட்டு வரும் விதத்தை மாற்றுவது அல்ல என்று திருவாட்டி ஃபூ மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கில்மன்நீடித்த நிலைத்தன்மைகிரேஸ் ஃபூதலைமைத்துவம்