காணாமல் போன 21 வயது பெண் கண்டுபிடிப்பு

காணாமல் போன 21 வயது பெண் கண்டுபிடிப்பு

1 mins read
59674386-7df7-4c3a-9cc1-130d2e571b63
அலினா சுவா லி ஷான் என்ற 21 வயது பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

காணாமல் போனதாகக் காவல்துறையால் அறிவிக்கப்பட்ட 21 வயது பெண் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, அலினா சுவா லி ஷான் என்ற அந்தப் பெண் கடைசியாக, புளோக் 539 பிடோக் நார்த் ஸ்டிரீட் 3 அருகே காணப்பட்டார். 

அப்போது, அவர் கறுப்பு நிற டி-சட்டையையும் நீல ‘குரோக்ஸ்’ காலணிகளையும் அணிந்திருந்தார்.  

அவரைப் பற்றி தகவல் அறிந்தோர், காவல்துறையைத் தொடர்பு கொள்ளும்படி இதற்கு முன்பு அது வெளியிட்ட அறிக்கை கேட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்