தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புத்தாண்டு தினத்தில் ஃபுல்லர்டன் ஹோட்டலில் கைகலப்பு

2 mins read
a1c6f77a-6041-4a50-96b9-0a4d6abd3d9b
வெள்ளை ஆடை அணிந்திருந்த ஆடவர், நீல நிற ஆடை அணிந்திருந்த ஆடவரைச் சண்டைக்கு இழுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. - படங்கள்: தி ஸ்டோம்ப்

ஜனவரி 1ஆம் தேதி அதிகாலையில் தி ஃபுல்லர்டன் ஹோட்டலில் நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டம் கைகலப்பில் முடிந்தது.

தி ஸ்டோம்ப் வாசகர் செல்வா, இரு ஆடவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது சம்பவ இடத்தில் இருந்தார்.

“வாணவேடிக்கைக்குப் பிறகு நிலவிய அமைதி, முடிவில்லாத சண்டையால் சீர்குலைந்தது,” என்று அவர் கூறினார்.

தாம் எடுத்த காணொளியை மேற்கோள் காட்டிய திரு செல்வா, வெள்ளை உடை அணிந்த ஒருவரை ஹோட்டலுக்கு வெளியே கூடியிருந்த ஒரு குழுவினர் வெளியேறச் சொன்னார்கள். ஆனால், அதற்கு அவர் இணங்க மறுத்துவிட்டார்.

அங்கிருந்த ஒரு பெண், “நிறுத்துங்கள், நிறுத்துங்கள், தயவுசெய்து நிறுத்துங்கள்,” என்று கூச்சலிட்டார்.

“வெள்ளை ஆடை அணிந்திருந்த நபர் ஹோட்டலைவிட்டு வெளியேறவில்லை. மாறாக அவர், நீல நிற ஆடை அணிந்த ஆடவர் ஒருவரை நோக்கி மிகுந்த சினத்துடன் ஓடினார்,” என்று திரு செல்வா கூறினார்.

“பலர் தலையிட்டு சண்டையைக் கலைத்துவிட முயன்றனர். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு சண்டை மீண்டும் வெடித்தது. வெள்ளை ஆடை அணிந்திருந்த ஆடவர், நீல நிற ஆடை அணிந்திருந்த ஆடவரைச் சண்டைக்கு இழுத்தார்,” என்றும் திரு செல்வா விவரித்தார்.

எண் 1, ஃபுல்லர்டன் ரோட்டில் நிகழ்ந்த இந்தக் கைகலப்பு குறித்து ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

“24 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் எங்கள் விசாரணைக்கு உதவி வருகின்றனர்,” என்று காவல்துறை பேச்சாளர் கூறினார்.

காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்