மகள் உட்பட 11 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவர் ஒப்புதல்

மகள் உட்பட 11 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவர் ஒப்புதல்

2 mins read
125fc2e5-4547-4320-9034-96ad5e01e8cb
முதியவரால் பாதிக்கப்பட்டோரில் சொந்த மகள், மருமகள்கள், பேத்திகள் ஆகியோரும் அடங்குவர். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்

சொந்த மகள், மருமகள்கள், பேத்திகள், உடன்பிறேந்தோர் மகள்கள் உட்பட 30 ஆண்டுகளுக்கும் மேலாக 11 சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்த முதியவர் அவரது குற்றங்களை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

தற்போது 70 வயதை எட்டியுள்ள அவர் மொத்தம் 33 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் ஆறு பெண்கள் சம்பந்தப்பட்ட 10 குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆடவர் குற்றங்கள் புரிந்தபோது, பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஐந்து முதல் பத்து வயதுக்குட்பட்டிருந்தனர் என்று அரசாங்க வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் அவரது மனைவியுடன் இணைந்து 1997முதல் 2021 ஆம் ஆண்டுவரை சிறுவர்களுக்கான மேம்பாட்டு நிலையத்தை நிறுவினார். அதற்கு முன்பாக அந்த ஆடவர் வீட்டில் துணைப்பாட வகுப்புகளை நடத்திவந்தார். அந்த காலகட்டத்தில் அக்குற்றச்செயல்கள் நடந்துள்ளன.

ஆடவரால் சீண்டப்பட்ட சிறுமிகளுக்கு ஏற்பட்ட கடுமையான உளவியல் பாதிப்புகளையும், குற்றங்களின் தீவிரத்தன்மையையும் நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் விளக்கினார். எனவே, அவருக்கு 32 முதல் 36 ஆண்டுகால நீண்டநாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் நீதிபதியைக் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கில் முதியவருக்கான தண்டனை செப்டம்பர் 7ஆம் தேதி விதிக்கப்படும். அப்போது அவர்மீது உள்ள மேலும் 23 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் அவருக்கு பிரம்படிகள் வழங்கமுடியாது.

அந்த ஆடவர் 2020ஆம் ஆண்டில் அவரது சிறுவர் மேம்பாட்டு நிலையத்தில் மூன்று சகோதரிகளிடம் பாலியல் குற்றங்கள் புரிந்ததால் ஏற்கெனவே இரண்டு முறை சிறைத் தண்டனைகள் பெற்றவர். சிறைவாசம் முடிந்து வீடு திரும்பியதும் அவர் பாலியல் குற்றங்களை மீண்டும் செய்யத் தொடங்கினார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன் கருதியும், அவர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் முதியவரின் விவரங்கள் எதையும் வெளியிட அனுமதி இல்லை.

குறிப்புச் சொற்கள்
முதியவர்பாலியல் குற்றம்சிறைத்தண்டனைஉயர் நீதிமன்றம்அரசாங்கம்வழக்கறிஞர்