சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பாகப் பரவும் பொய்ச் செய்திகள்

1 mins read
0776f971-b9e4-4d23-b819-312154d41995
சுகாதாரம் தொடர்பான தகவல்களுக்குப் பொதுமக்கள் அமைச்சின் www.moh.gov.sg என்ற இணையப் பக்கத்தை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பாக இரண்டு பொய்ச் செய்திகள் பரவிவருகின்றன, அவற்றை நம்ப வேண்டாம் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

கடந்த சில நாள்களாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்த இரண்டு பொய்ச் செய்திகள்குறித்து சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அறிக்கை வெளியிட்டது.

முதல் பொய்ச் செய்தியானது, சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளது. இது இதற்கு முன் எந்த நாட்டிலும் நடக்கவில்லை. உடற்கூறாய்வில் கொவிட்-19 ‘வைரஸ்’ கிருமி இல்லை, அது ‘பாக்டீரியா’ நுண்ணுயிர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொய்ச் செய்தி இதற்குமுன் 2021ஆம் ஆண்டு பரவியது, தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது என்று அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடற்கூறாய்வு செய்யவில்லை என்றும் கொவிட்-19 ‘பாக்டீரியா’ நுண்ணுயிர் இல்லை என்றும் அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இரண்டாவது பொய்ச் செய்தியானது, சிங்கப்பூரில் கொவிட்19 தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்படவுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

இதுவும் பொய்யான செய்தி, இதை நம்ப வேண்டாம் என்று அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

சுகாதாரம் தொடர்பான தகவல்களுக்குப் பொதுமக்களை அமைச்சு www.moh.gov.sg என்ற இணையப் பக்கத்தை நாடுமாறு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்