கொவிட்-19 தடுப்பூசி போடுதலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் சக்தி கட்சி விடுத்த தொடர் கோரிக்கையை சுகாதார அமைச்சு மீண்டும் நிராகரித்துள்ளது.
மே 29ஆம் தேதி தனது ஃபேஸ்புக்கில், அக்கட்சி கொவிட்-19 தடுப்பூசி போடுதலை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கருத்தைப் பதிவிட்டது.
பின்னர், “கொவிட்- 19 தடுப்பூசி போடுவதால் தொடர்ந்து அதிகமான மரணங்கள் நிகழ்வதாக 47 மேற்கத்திய நாடுகளில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதேபோன்ற கவலை தலைதூக்கியுள்ளது,” என்று பிஎம்ஜே பொதுச் சுகாதார சஞ்சிகை (BMJ Public Health journal) ஜூன் 3ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையை மேற்கோள் காட்டி மீண்டும் அக்கட்சி ஜூன் 17ஆம் தேதி தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தியது.
ஊடக அமைப்புகளுக்கு ஜூலை 22ஆம் தேதி சுகாதார அமைச்சு அனுப்பிய மின்னஞ்சலில், “மக்கள் சக்தி கட்சி தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து பற்றி எங்களுக்குத் தெரியும்.
“அக்கட்சியின் பதிவில், ‘கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து மேற்கத்திய உலகில் உள்ள நாடுகளில் அதிகப்படியான இறப்பு: ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2022 வரையிலான தரவு மதிப்பீடுகளில் நமது உலகம்’ எனும் இன்னொரு கட்டுரையையும் அது மேற்கோள் காட்டியிருந்தது.
“மேற்கத்திய நாடுகளில் அதிக இறப்பு விகிதத்திற்குப் பின்னால் கொவிட்-19 தடுப்பூசி முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று அந்தக் கட்டுரை கூறியிருந்தது.
“இது தவறானது,” என்று குறிப்பிட்ட அமைச்சு, கொவிட்-19 தடுப்பூசிக்கும் இறப்புக்கும் இடையே தான் எந்த நேரடி காரணத்தையும் வெளியிடவில்லை என்று பிஎம்ஜே பொதுச் சுகாதார சஞ்சிகை ஜூன் 7ஆம் தேதி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டது.
நெதர்லாந்தில் உள்ள பிரின்சஸ் மாக்சிமா மையம், இந்த ஆய்வின் அறிவியல் தரத்தை மேலும் ஆராய்வதாக சுகாதார அமைச்சு ஜூன் 11ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் கடுமையான நோய்களிலிருந்தும் கொவிட்-19 நோய்த்தொற்றால் ஏற்படும் மரணத்திலிருந்தும் தடுப்பூசி பாதுகாக்கிறது என்பதை அறிவியல் சான்றுகள் பெருமளவில் காட்டுவதாக சுகாதார அமைச்சு கூறியது.
“கொவிட்-19 அலைகள் தொடர்ந்து நிகழும் என்பதால், முதியவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் தங்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பரிந்துரைக்கிறோம்,” என்று அமைச்சு தனது அறிக்கையில் கூறியது.

