சமூகப் பராமரிப்பு ஊழியர்களின் சம்பளம் 7% உயர்த்தப்படும்: ஓங் யி காங்

சமூகப் பராமரிப்பு ஊழியர்களின் சம்பளம் 7% உயர்த்தப்படும்: ஓங் யி காங்

1 mins read
78b14f8c-92d1-4258-b997-8a8d530f86ac
அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (இளஞ்சிவப்புச் சட்டை). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சமூகப் பராமரிப்பு அமைப்புகளில் வேலை செய்யும் 23,000 பேரின் வருடாந்தரச் சம்பளம் கிட்டத்தட்ட ஏழு விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக உயர்த்தப்படவுள்ளது.

2026ஆம் ஆண்டிறுதிக்குள் புதிய சம்பள வழிகாட்டி நெறிமுறைகளைச் சுகாதார அமைச்சு வெளியிடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்தார்.

அலெக்சாண்ட்ரா மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது இந்தத் தகவலை அமைச்சர் வெளியிட்டார்.

சம்பள உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளைச் சமாளிக்க அமைப்புகளுக்கு முதற்கட்டமாக 100 மில்லியன் வெள்ளியைச் சுகாதார அமைச்சு வழங்கும் என்றார் அமைச்சர் ஓங்.

வரும் மாதங்களில் புதிய சம்பள வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்ற அவர், ஆண்டிறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதால், அதற்கு முன்னரே அமைப்புகள் தேவைப்படும் திட்டங்களை மேற்கொள்ளவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

“இதுபோன்ற சம்பள உயர்வை வழங்குவதன்மூலம், பலரையும் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு ஈர்க்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று திரு ஓங் கூறினார்.

கடந்த ஆண்டும் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ள ஊழியர்களைத் தக்கவைக்கவும் புதிய ஊழியர்களை ஈர்க்கவும் ஏழு விழுக்காட்டுச் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அது 2025 ஜூலைமுதல் நடப்புக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்