மானபங்கத் தண்டனை: ‘சிங்கப்பூர் ஐடல்’ முன்னாள் நடுவர் மேல்முறையீடு

மானபங்கத் தண்டனை: ‘சிங்கப்பூர் ஐடல்’ முன்னாள் நடுவர் மேல்முறையீடு

1 mins read
1d529346-7c23-473b-b6ec-cbb78502a3ae
தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள கென் லிம் சி சியாங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2021ஆம் ஆண்டு பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ‘சிங்கப்பூர் ஐடல்’ நிகழ்ச்சியின் முன்னாள் நடுவரான கென் லிம் சி சியாங் (62) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தமது ‘ஹைப் ரெக்கார்ட்ஸ்’ அலுவலகத்தில் 25 வயதுப் பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக கென் லிம்மிற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை உண்மையெனவும் கென் லிம்மின் வாதத்தைப் பொய்யானது எனவும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

விசாரணையைத் தொடர்ந்து, 2025 செப்டம்பர் 26ஆம் தேதி கென் லிம் மீதான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்து, 2025 நவம்பர் 18ஆம் தேதி தண்டனையை அறிவித்தது.

அந்தத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்ற போது, கென் லிம் சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் டான் சீ மெங், பாதிக்கப்பட்ட பெண் பொய்யான ஆதாரங்களை உருவாக்கும் இயல்புடையவர் என்று கூறி அவரது வாக்குமூலத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ள நீதிபதி ஹு ஷியாவ் பெங், மறுதேதி குறிப்பிடாமல் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்