மேலும் 300 இடங்களில் சோதனை: மனிதவள அமைச்சு

இம்­மா­தம் சில வேலை­யி­டங்­களில் நிகழ்ந்த விபத்­து­கள் கார­ண­மாக ஏழு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இதை­ய­டுத்து, அபா­யங்­கள் அதி­கம் உள்ள 300 வேலை­யி­டங்­களில் சோதனை நடத்த மனி­த­வள அமைச்சு முடி­வெ­டுத்­துள்­ளது.

இந்­தச் சோத­னை­கள் அடுத்த மாத நடுப்­ப­குதி வரை தொட­ரும் என்று மனி­த­வள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் குறிப்­பிட்­டது.

கட்­டு­மா­னத்­துறை, உற்­பத்­தித்­துறை, கடற்­துறை ஆகி­ய­வற்­றின் வேலை­யி­டங்­களில் உய­ர­மான இடங்­களில் வேலை செய்­வோ­ருக்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மீறப்­ப­டு­வது, இயந்­தி­ரங்­க­ளைப் பாது­காப்­பான முறை­யில் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக சோத­னை­கள் நடத்­தப்­படும்.

இம்­மா­தம் வேலை­யி­டங்­களில் மாண்ட ஏழு பேரில் மூன்று பேர் உய­ர­மான இடத்­தி­லி­ருந்து விழுந்து இறந்­த­னர்.

இயந்­தி­ரங்­க­ளுக்கு நடுவே சிக்கி மூவர் உயி­ரி­ழந்­த­னர். ஒரு­வர் வேலை தொடர்­பாக பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­த­போது விபத்து நிகழ்ந்து மாண்­டார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் நடுப்­ப­கு­திக்­கும் இம்­மாத இடைப்­பட்ட கால­கட்­டத்­தி­லும் ஆப்­ப­ரே­ஷன் ராபின் எனும் சோத­னைத் திட்­டத்தை மனி­த­வள அமைச்சு நடத்­தி­யது.

அதன்­படி பல்­வேறு வேலை­யி­டங்­களில் 400 சோத­னை­கள் நடத்­தப்­பட்­டன.

அதி­லி­ருந்து 486 விதி­மீ­றல்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு ஏழு வேலை நிறுத்த உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

வேலை முடிந்­த­தும் சில இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து சாவி அகற்­றப்­ப­டா­த­தை­யும் பாது­காப்­பற்ற முறை­யில் மின்­கம்­பி­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தை­யும் மனி­த­வள அமைச்­சின் அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

“விதி­மீ­றல்­களை மனி­த­வள அமைச்சு மிகக் கடு­மை­யான குற்­றங்­க­ளா­கக் கரு­து­கிறது. ஊழி­யர்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படக் கார­ண­மாக இருப்­போ­ருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க அமைச்சு தயக்­கம் காட்­டாது,” என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த ஆண்­டில் மொத்­தம் 30 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­ன­தா­க­வும் இம்­மா­தம் மட்­டும் ஏழு மர­ணங்­கள் பதி­வா­கி­யி­ருப்­ப­தா­க­வும் மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது கூறி­னார்.

இது மிக­வும் கவ­லைக்­கு­ரி­யது. முறை­யான நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் இந்த மர­ணங்­கள் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­க­லாம்,” என்­றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!