தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளப்பணப் பரிமாற்றம்: நால்வர் கைது; $440,000 பறிமுதல்

1 mins read
ba985e82-14bd-47f7-bdae-b5a4f962fd55
நால்வரும் 22 வயதுக்குட்பட்ட இளையர்கள். அவர்களில் இருவர் பெண்கள். - படம்: காவல்துறை

கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பாக சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை நடத்திய சோதனையில் நால்வர் சிக்கினர்.

மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக நம்பப்படும் $440,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 14 முதல் 17 வரை நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் பெண்கள். அவர்கள் அனைவரும் 18க்கும் 22க்கும் இடைப்பட்ட வயதினர்.

கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பாக மேலும் 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியது.

ஜிஎக்ஸ்எஸ் வங்கி (GXS Bank) அளித்த தகவலின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தி அந்த நால்வரையும் அடையாளம் கண்டது.

கிராப் நிறுவனமும் சிங்டெல்லும் இணைந்து அந்த மின்னிலக்க வங்கியை நடத்துகின்றன.

அந்த வங்கியில் கணக்குத் திறந்து அதன் விவரங்களை மோசடிக்காரர்களிடம் சந்தேக நபர்கள் தந்ததாகவும் அதற்காக அவர்கள் $500 வரை பெற்றுக்கொண்டதாகவும் தெரிய வந்தது.

மேலும் சிலர் 500 வெள்ளிக்காக தங்களது சிங்பாஸ் விவரங்களை மோசடிக்காரர்களிடம் கொடுத்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் நோக்கத்துடன் நிறுவன வங்கிக் கணக்குகளைத் திறக்க அந்த விவரங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்தக்கூடும்.

குறிப்புச் சொற்கள்