தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடி செய்ய இணையம்வழி ஆள்சேர்ப்பு

2 mins read
3386857a-2b65-455c-89e6-ee0104cb6861
பணமோசடிக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. - படம்: சாவ்பாவ்

பணமோசடி வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு மாதம் $500 கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது.

அதோடு, ரகசிய வங்கி விவரங்களை நிரப்பும் பகுதியைத் தவிர, மற்ற தனிப்பட்ட விவரங்களுடன் விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதற்கான செயல்முறை சிரமமற்றதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலாளிகள் வழக்கமாக விண்ணப்பதாரர்களின் தானியக்க வங்கி இயந்திர அட்டையின் 16 எண்களைக் கேட்கமாட்டார்கள்.

இருப்பினும், அத்தகைய தகவல்களை இந்த வழியில் பெறுவது மோசடியின் ஒரு பகுதி அல்ல. ஆனால் பணமோசடிக்காரர்களின் ஆள்சேர்ப்பு செயல்முறையின் ஒரு பகுதி அது.

டெலிகிராம் போன்ற தளங்கள் பிரபலம் அடைந்துவரும் நிலையில், பணமோசடிக் கும்பல்காரர்கள் ஆள்களை எளிதில் வேலையில் சேர்க்கமுடிவதாகத் தெரிவிக்கப்பட்டது. பணமோசடிக் கும்பல்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2019ஆம் ஆண்டில், பணமோசடிக் குற்றங்களுக்காக காவல்துறை கைதுசெய்த அல்லது விசாரித்தவர்களின் எண்ணிக்கை 1,000க்கும் அதிகம்.

அதற்கு மறு ஆண்டு, அந்த எண்ணிக்கை 4,800ஐத் தாண்டியது. 2021ஆம் ஆண்டில் 7,500க்கும் அதிகமானோர் பிடிபட்டபோது, அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது. 2022ஆம் ஆண்டில், 7,800க்கும் அதிகமானோர் பணமோசடிக் குற்றங்களுக்குக் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாண்டு ஜனவரிக்கும் ஜூன் மாதத்திற்கும் இடையே, 4,700க்கும் மேற்பட்டோர் பணமோசடிக்காரர்களாகச் செயல்பட்டதற்குக் கைதுசெய்யப்பட்டனர் அல்லது விசாரிக்கப்பட்டனர்.

இவ்வாண்டு சிங்கப்பூர் காவல்துறை நடத்திய ஆய்வு ஒன்றில், 2020க்கும் 2022க்கும் இடையே புகார் செய்யப்பட்ட மோசடிச் சம்பவங்களுடன் தொடர்புடைய 113 பணமோசடிக்காரர்களில் கிட்டத்தட்ட 45 விழுக்காட்டினர் 25 அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், பணமோசடிக்காரர்களாகச் செயல்பட்டதற்குப் பலர் கைதுசெய்யப்படுவது கவலைக்குரியது என்று கூறினார். அவர்களில் சிலர் பத்து வயது நிரம்பியவர்கள்.

குறிப்புச் சொற்கள்