தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிக அளவில் பாக்டீரியா கிருமி; ‘மூன்கேக்’ மீட்பு

1 mins read
e28a1742-4f05-46e5-b9c6-849f8d06e1d0
‘ஜாய்மம்ஸ் முசாங் கிங் மூன்கேக்’ (இடது), ‘ஃபிரேகரன்ஸ் மூன்கேக்’ இரண்டிலும் பாக்டீரியா கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது. - படங்கள்: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூரில் விற்பனையாகும் இரண்டு வகையான ‘மூன்கேக்’ பணியாரங்களில் உணவை நஞ்சாக மாற்றும் பாக்டீரியா கிருமி அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உணவு அமைப்பு அவற்றை மீட்டுக்கொண்டது.

‘ஜாய்மம்ஸ் முசாங் கிங் ஸ்னோஸ்கின் மூன்கேக்’, ‘ஃபிரேகரன்ஸ் சிங்கல் யோக் லோட்டஸ் பேஸ்ட் பேக்ட் மூன்கேக்’ ஆகியவை அவை.

இரண்டு பணியாரங்களிலும் கிருமிகளின் அளவு, சிங்கப்பூர் உணவுப்பொருள் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச வரம்பைத் தாண்டியிருப்பதாக அமைப்பு கூறியது.

எனவே இரண்டையும் மீட்டுக்கொள்ளும்படி அவற்றின் இறக்குமதியாளர்களுக்கு அமைப்பு உத்தரவிட்டது.

பணியாரங்களை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது.

அவை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

அந்தப் பணியாரங்களை வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ளவேண்டாம் என்று அமைப்பு கேட்டுக்கொண்டது. ஏற்கெனவே அவற்றை உட்கொண்டவர்கள், தங்கள் உடல்நிலை குறித்து கவலை எழுந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும் என்று அது ஆலோசனை வழங்கியது.

குறிப்புச் சொற்கள்