ஜிஎஸ்டிவி எனப்படும் பொருள் சேவை வரிப் பற்றுச்சீட்டுகள் திட்டத்தின் அங்கமாக 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் 850 வெள்ளி வரையிலான தொகையைப் பெறுவர்.
கிட்டத்தட்ட 690,000 மூத்தோர்கள் 450 வெள்ளி வரையிலான மெடிசேவ் நிரப்புத்தொகையைப் பெறுவர் என்று நிதியமைச்சு, ஜூலை 7ஆம் தேதி வெளியிட்ட செய்தியாளர் அறிக்கையில் குறிப்பிட்டது.
2025ல் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 39,000 வெள்ளி வரையிலான வருடாந்தரச் சம்பளம் இருந்தாலோ 2024ல் 21,000 வெள்ளி வரையிலான வருடாந்தர சம்பள மதிப்பு கொண்டுள்ள வரை அவர்கள் 850 வெள்ளியை ரொக்கமாகப் பெறுவர்.
இதே வயதும் வருமானத் தகுதியும் உள்ளவர்கள் ஆனால் 21,000 வெள்ளிக்கு மேற்பட்டும் 31,000 வெள்ளிக்கு குறைவாகவும் உள்ளவர்களுக்கு, 850 வெள்ளிக்குப் பதிலாக 450 வெள்ளி பெறுவர்.
ஒரு சொத்துக்கு மேல் உரிமை கொண்டுள்ள சிங்கப்பூரர்கள், இந்தத் தொகையைப் பெறத் தகுதியானவர்கள் அல்லர்.
தகுதிபெறும் நபர்கள், ஆகஸ்ட் 6 முதல் பேநவ் வழியாக இந்தத் தொகைக்குத் தகுதிபெறுவர். இதற்காக இவர்கள் முன்னமே தங்களது அடையாள அட்டை எண்ணைப் பேநவ்வுடன் இணைந்திருக்கவேண்டும்.
ஜைரோ(giro) முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஆகஸ்ட் 15 முதல் தங்களுக்குரிய கட்டணத் தொகைகளைப் பெறுவர். கொவ்கேஷ் (GovCash) முறையைத் தெரிவு செய்தவர்கள், தங்கள் தொகைகளை ஆகஸ்ட் 22 முதல் பெறுவர்.
தொகை பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது கடிதம் வழியாகத் தெரிவிக்கப்படும். குறைந்த, நடுத்தர வருமான சிங்கப்பூரர்களின் ஜிஎஸ்டி செலவுகளைக் குறைக்க அந்த நிரந்தரப் பற்றுச்சீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த முறை வெளிவரும் வழங்கீட்டுத் தொகைக்கான வருடாந்தர வருமான தகுதிநிலை, 34,000 வெள்ளியிலிருந்து 39,000 வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது. சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வருமானம் உயர்ந்ததற்கு இது காரணம்.


