மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கிட்டத்தட்ட 1.1 டன் எடைகொண்ட காய்கறிகளையும் பழங்களையும் சிங்கப்பூர் உணவு அமைப்பு பறிமுதல் செய்தது.
அந்த அமைப்பும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையமும் இணைந்து நவம்பர் 14, 15 தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையில் அவை சிக்கியதாக கூறப்பட்டது.
பொதுவாக சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக விநியோகிப்பதற்காக புதிய மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளையும் பழங்களையும் ஏற்றிச் செல்லும் கனரக விநியோக வாகனங்களைக் குறிவைத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.