நான்கு பூனைகளை கத்தியால் குத்தி அவற்றில் இரண்டு பூனைகளை உயிரிழக்கச் செய்த ரையன் டான் யீ பின் என்ற 27 வயது ஆடவருக்கு இரண்டு ஆண்டு ஏழு மாத சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) விதிக்கப்பட்டது.
மிருகங்களை வதைத்த மூன்று குற்றங்களை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தமது பெண் நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப் பிறகு மாறுதலுக்காக வேறு நடவடிக்கையை நாடிய ரையன், பூனைகளிடம் ஆறுதல் தேடினார்.
ஆனால் அவரது அன்பை அவை சரியாகப் புரிந்துகொள்ளாததால் அவற்றை கொடுமைப்படுத்த அவர் முடிவெடுத்தார்.
சுவற்றின்மீது ஒரு பூனையை சுழற்றி அடித்தது, ஒரு பூனையை வீடமைப்புக் கட்டடத்தின் 34வது மாடியில் இருந்து கீழே விசியது உட்பட, ஓர் ஆண்டுக்குள் நான்கு பூனைகளை அவர் வதைத்தார்.
விடுதலை ஆனதும் எவ்விதப் பிராணிகளையும் அவர் 12 மாதங்களுக்கு வைத்திருக்க முடியாது என்ற நிபந்தணை, தண்டனையில் உள்ளடக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது பெண் நண்பருடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குப் பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரையன் குற்றங்களைச் செய்துள்ளார்.

