500க்கும் மேற்பட்ட போலி அரசாங்க இணையத்தளங்கள் அகற்றம்

500க்கும் மேற்பட்ட போலி அரசாங்க இணையத்தளங்கள் அகற்றம்

1 mins read
போலி உள்துறை அமைச்சு, உள்துறைக் குழு இணையத்தளங்கள் அகற்றப்பட்டன
498f464f-de3c-4f47-ba4c-5444300962c1
உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் காவல் படை ஆகியவற்றின் தலைமையகங்கள். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

உள்துறை அமைச்சு, ஏழு உள்துறைக் குழுக்களின் இணையத்தளங்களைப் போல் தென்பட்ட 500க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் அகற்றப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் காவல் படை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு போன்றவை சம்பந்தப்பட்ட உள்துறைக் குழு அமைப்புகளில் அடங்கும்.

அந்தப் போலி இணையத்தளங்கள் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் (எச்டிஎக்ஸ்) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) தெரிவித்தன. எச்டிஎக்சும் சம்பந்தப்பட்ட ஏழு அமைப்புகளில் ஒன்றாகும்.

அந்தப் போலி இணையத்தளங்கள் மோசடிச் செயல்களுக்காகவோ பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பறிப்பதற்காகவோ பயன்படுத்தப்பட்டதாக ஆதாரம் ஏதுமில்லை என்று இதுவரை நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்காவல்துறைஉள்துறை அமைச்சுஇணையத்தளம்