மருத்துவ உத்தரவுக்கு 84,000க்கும் அதிகமானோர் பதிவு

மருத்துவ உத்தரவுக்கு 84,000க்கும் அதிகமானோர் பதிவு

1 mins read
0c207370-5efe-435e-9600-e811131e2c38
சிங்கப்பூரில், 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் சுயநினைவுடன் சட்டபூர்வ மருத்துவ ஆவணத்தில் கையெழுத்திடலாம். - படம்: ஐஸ்டோக்

சுகாதாரத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம், தீராத நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, செயற்கைச் சுவாசக் கருவிகள் போன்ற சிகிச்சைகளைத் தொடரவேண்டாம் என்று குறிப்பிடும் மருத்துவ உத்தரவுகளில் 84,500க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சுயநினைவை இழந்த பிறகும் செயற்கை சிகிச்சைகளைத் தொடரவேண்டாம் என்று அந்த மருத்துவ உத்தரவுகள் குறிப்பிடுகின்றன.

சிங்கப்பூரில், 21 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் சுயநினைவுடன் அந்தச் சட்டபூர்வ ஆவணத்தில் கையெழுத்திடலாம்.

மருத்துவர்களின் முன்னிலையில் அந்த ஆவணம் கையெழுத்திடப்பட வேண்டும் என்ற நிபந்தனையைச் சுகாதார அமைச்சு அகற்றுவது குறித்து ஆலோசிக்குமா என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் குவா பூன் தெங் நாடாளுமன்றத்தில் கேட்டார்.

நீண்டகால அதிகாரப் பத்திரத்துக்குப் பதிவுசெய்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்புநோக்க மருத்துவ உத்தரவுக்குப் பதிவோரின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகத் திருவாட்டி குவா குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
மருத்துவம்உத்தரவுபதிவு