அதிகமான இளம் போதைப் புழங்கிகள் சென்ற ஆண்டு கைது

அதிகமான இளம் போதைப் புழங்கிகள் சென்ற ஆண்டு கைது

1 mins read
d3d0d06a-a2d2-47ac-852d-b97bf36c9803
கஞ்சா பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 71% அதிகரித்தது (படம்: போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு) -

சிங்கப்பூரில் அதிகமானோர் கஞ்சா போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். அதோடு 30 வயதுக்கு குறைவான அதிகமான இளையர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டுக்கான புள்ளிவிவரங்களை பிரிவு இன்று வெளியிட்டது.

கஞ்சா பயன்படுத்திய குற்றத்திற்காக 2022ஆம் ஆண்டு 236 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா பயன்படுத்திய குற்றத்திற்காக முதன்முறையாக கைதுசெய்யப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் 30 வயதுக்கு குறைவானவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் 14 வயது சிறுமியும் ஒருவர்.

உலகளவில் போதைப்பொருள் குறித்த மனப்போக்கு மாறிவருவதால் அதிகமான இளையர்கள் போதைப்பொருளை நாடுகின்றனர்.

போதைப்பொருள் குறித்து இளையர்களிடையே உள்ள விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க பிரிவு திட்டமிட்டுள்ளது.