2024ன் முதல் ஐந்து மாதங்களில் கூடுதல் கார்களின் சிஓஇ நீட்டிப்பு

2024ன் முதல் ஐந்து மாதங்களில் கூடுதல் கார்களின் சிஓஇ நீட்டிப்பு

1 mins read
1a00cb74-4983-47e4-9059-7f96711e8367
3,949 கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ்கள் நீட்டிக்கப்பட்டன. - படம்: சாவ்பாவ்

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) நீட்டிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

3,949 கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ்கள் நீட்டிக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் வாகன உரிமைச் சான்றிதழ் நீட்டிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையைவிட இது 74 விழுக்காடு அதிகம்.

2023ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 2,270 கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ்கள் நீட்டிக்கப்பட்டன.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 15,946 கார்களின் பதிவு நீக்கப்பட்டன.

2023ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் பதிவு நீக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கையைவிட இது 46 விழுக்காடு அதிகம்.

புதிய கார்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றை வாங்குவதைவிட ஏற்கெனவே இருக்கும் கார்களின் வாகன உரிமைச் சான்றிதழை நீட்டிக்க கார் உரிமையாளர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கார் வாங்குவோர் வாகன உரிமைச் சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

வாகன உரிமைச் சான்றிதழ் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு காலாவதியாகிடும்.

அதன் பிறகு, கார் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பதிவை நீக்க வேண்டும்.

கார் தொடர்ந்து தேவைப்பட்டால் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு வாகன உரிமைச் சான்றிதழை நீட்டிக்க வேண்டும்.

வாகன உரிமைச் சான்றிதழ் காலாவதி ஆவதற்கு முன்பு அல்லது காலாவதியான பிறகு ஒரு மாதத்துக்குள் அதை நீட்டித்துவிட வேண்டும்.

குறிப்புச் சொற்கள்