ஏப்ரலில் கூடுதல் கொவிட்-19 மரணங்கள் பதிவானாலும் தொற்று விகிதம் சரிவு

ஏப்ரலில் கூடுதல் கொவிட்-19 மரணங்கள் பதிவானாலும் தொற்று விகிதம் சரிவு

1 mins read
754f41a9-affc-4e4f-a7a9-99bdb92a5315
-
Google News Preferred Icon

கடந்த ஏப்ரல் மாதத்தில், தற்போதைய அலையின் ஒரு பகுதியாக மொத்தம் 54 பேர் கொவிட்-19 காரணமாக உயிர் இழந்தனர். கடந்த மார்ச் மாதம், கிருமித்தொற்றுக்கான வாராந்திர விகிதம் 28,000ஐத் தாண்டியது.

ஏப்ரலில் பதிவான மரண எண்ணிக்கை 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான 30 மரணங்களைக் காட்டிலும் அதிகம் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன.

மே மாதத்தில் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பள்ளியில் உள்ள தொற்றுநோய் நிபுணர் இணைப் பேராசிரியர் சூ லி யாங் எச்சரித்தார்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, குறிப்பாக 60 வயதுப் பிரிவில் உள்ளவர்களிடையே அதிகரித்துள்ளது. இந்தப் பிரிவில் மரணங்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளதாக அவர் சொன்னார்.

ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவான 84 மரணங்களில், 81 பேர் 60 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அந்தப் வயது பிரிவைச் சேர்ந்தவர்கள்.

மே 14ஆம் தேதி இடம்பெற்ற வாரத்திற்கு, கொவிட்-19 கிருமித்தொற்று விகிதமும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் விகிதமும் குறைந்ததாகப் புள்ளிவிவரங்கள் காட்டின. இருப்பினும், அந்த விகிதங்கள் அதிகமாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வாரத்தில் 20,767 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. அதற்கு முந்தைய வாரத்தில் 23,531 சம்பவங்கள் பதிவாயின.