கரியமில சேவைத் துறை மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி

2 mins read
404544c7-083a-43d9-9b15-4ffd1fcf5c3c
திங்கட்கிழமை (மே 5) நடைபெற்ற ‘ஜென்ஸீரோ’ பருவநிலை மாநாட்டில் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் உரையாற்றுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்க வரி விதிப்பால் பொருளியல் நிச்சயமற்ற சூழலுடன் மற்ற புவிசார் அரசியல் நிலவரங்களும் சேர்ந்துள்ளன. எனினும், வளர்ந்து வரும் கரியமில சேவைத் துறை தனது மேம்பாட்டுக்கு நிதியுதவி, திறனாளர்களை வளர்ப்பது எனத் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது.

இதன் தொடர்பில் திங்கட்கிழமை (மே 5) நடைபெற்ற ‘ஜென்ஸீரோ’ பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மனிதவள அமைச்சரும் வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சருமான டான் சீ லெங், கரியமில துறை மேம்பாட்டுக்கு பல நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது

இதில் முதல் படியாக, பொருளியல் வளர்ச்சிக் கழகம் $20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கரியமில திட்ட மேம்பாட்டு நிதி (Carbon Project Development Grant) என்ற இந்த நிதி ஒதுக்கீடு உயர் ரக கரியமிலத் திட்டங்கள், கரியமில வாயு வெளியேற்றத்தை நீக்க உதவும் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கும் ஆரம்ப நிலையில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சாத்தியக்கூறு பற்றிய ஆய்வுகள், கரியமில வாயு வெளியேற்றத்தை நீக்க உதவும் திட்டங்களுக்கு தேவையானவற்றை உருவாக்க நிறுவனங்கள் எதிர்நோக்கும் நிதிப் பற்றாக்குறையை இது சரிசெய்யும்.

இந்த $20 மில்லியன் நிதி கரியமில திட்டங்களைச் செயல்படுத்த குடும்ப நிறுவனங்கள், அறநிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து நிதி பெறப்படுகிறது. இதை திங்கட்கிழமை பொருளியல் வளர்ச்சிக் கழகமும் தெமாசெக் நிறுவனத்தின் அறக்கட்டளைப் பிரிவும் ஏற்படுத்தின.

கரியமில வாயு வெளியேற்றத்தை நீக்கும் திட்டங்கள் இருவகையானவை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஒன்று, இயற்கை சார்ந்தது என்றும் மற்றது விறகு அடுப்பிலிருந்து பசுமை அடுப்பிற்கு மாறுவது போன்ற தொழில்நுட்பம் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், இயற்கை சார்ந்த திட்டங்களாக வனப் புனரமைப்பு, வனப் பராமரிப்பு போன்றவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்