2023இல் அதிகமான வீடுகள் மறுபயனீடு செய்கின்றன: கருத்தாய்வு

2023இல் அதிகமான வீடுகள் மறுபயனீடு செய்கின்றன: கருத்தாய்வு

1 mins read
ed495b67-7f89-4ba6-b115-9b14f4bcfbfa
கோப்புப் படம்: - எஸ்பிஎச்

அதிகமான வீடுகள் மறுபயனீடு செய்வதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு மேற்கொண்ட கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் 72 விழுக்காட்டு வீடுகள் மறுபயனீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் பதிவான 64 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

2180 பேர் பங்கெடுத்த அந்தக் கருத்தாய்வு இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நடத்தப்பட்டது.

மறுபயனீட்டுக் குப்பைத் தொட்டிகளில் போடப்படக்கூடிய பொதுவான பொருள்களை மேலும் பலரும் அறிந்திருப்பதாகக் கருத்தாய்வில் தெரியவந்தது.

நீரால் கழுவப்பட்ட ஷாம்பூ, சலவைத் தூள் போத்தல்களை மறுபயனீடு செய்யப்படலாம் என்பதை ஏறக்குறைய 89 விழுக்காட்டினர் அறிந்திருந்தனர். 2021ஆம் ஆண்டில் அது 71 விழுக்காடாக மட்டுமே இருந்தது.

தேவையற்ற பழம், காய்கறி, கறைபட்ட நெகிழி உணவுப் பொட்டலங்கள், சிறிய மின்னணுக் கருவிகள் போன்றவற்றை மறுபயனீட்டுக் குப்பைத் தொட்டிகளில் போடமுடியாது என்பதை 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், குறைவானவர்களே அறிந்திருந்தனர்.

தேசிய கழிவுகளற்ற சூழலுக்கான பெருந்திட்டம், சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030இன் கீழ், 2030ஆம் ஆண்டுக்குள் 70 விழுக்காடு ஒட்டுமொத்த மறுபயனீட்டு விகிதத்தை எட்ட சிங்கப்பூர் நோக்கம் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் வீடுகளில் மறுபயனீடு செய்யப்படும் விகிதம் 2022ஆம் ஆண்டில் 12 விழுக்காட்டுக்குக் குறைந்தது. பத்தாண்டுகளுக்கு மேல் பதிவான ஆகக் குறைவான விகிதம் அது.

குறிப்புச் சொற்கள்