தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு விலைமாதர்களிடம் லஞ்சமாக பாலியல் சுகம், பணம்: அதிகாரிக்கு அதிக தண்டனை

1 mins read
072a27c5-9754-4892-97df-ce24f4febbf7
குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய முன்னாள் அதிகாரி டியோ ஹுவீ பெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு விலைமாதர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து இருக்க உதவி செய்ததற்காக பணத்தையும் பாலியல் சுகத்தையும் லஞ்சமாகப் பெற்ற குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி ஒருவரின் சிறைத் தண்டனை நான்கு ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

டியோ ஹுவீ பெங், 50, எனப்படும் அவர் சீனாவைச் சேர்ந்த லியாங் கிங்கிலான், செங் வென்ஜுவான் என்னும் இரு பெண்களுக்கு உதவியதன் தொடர்பில் 12 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

சிங்கப்பூரில் அதிக நாள்கள் தங்கி இருப்பதற்கு வசதியாக அந்தப் பெண்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை (ஸ்பெஷல் பாஸ்) வழங்க உதவி செய்தபோது அந்தக் குற்றங்களை அவர் செய்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டு அவர் மீதான எட்டு குற்றச்சாட்டுகளுக்காக ஈராண்டு, ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதர நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

தீர்ப்பை எதிர்த்தும் மூன்று குற்றச்சாட்டுகளில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அரசுத்தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

டியோவும் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி அரசுத்தரப்பு மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எட்டுக்குப் பதில் 11 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று அறிவித்தார். அதேநேரம், டியோவின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (மே 27), நாலரை ஆண்டுக்கும் ஐந்தரை ஆண்டுக்கும் இடைப்பட்ட சிறைத் தண்டனை விதிக்குமாறு அரசுத்தரப்பு கோரியது.

குறிப்புச் சொற்கள்