சீர்திருத்தப் பயிற்சி முடித்தவர்கள் மறுபடி குற்றம் புரிவது குறைந்துள்ளது

2 mins read
6438dc0c-2b85-4806-bef4-30d1d2e4e43b
தற்போது சீர்திருத்தப் பயிற்சி மேற்கொண்டு வருவோரின் பயிற்சிக்காலம் முடியும் தருவாயில் திரு ஃபை என்பவருக்கு சான்றிதழ் வழங்குகிறார் உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் (வலமிருந்து இரண்டாவது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூன்று வயதில் தாயார் கைவிட்ட நிலை, தந்தையும் போதைப்பொருள் புழக்கத்தில் இறந்துவிட்ட நிலையில், ஃபை என்பவர் (அவரது உண்மைப் பெயர் அல்ல) தமது பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டார்.

தற்பொழுது 19 வயதாகும் அவர் மனதமுடைந்து வாழ்க்கை வெறுமையாக இருப்பதுபோல் உணர்கிறார்.

மன ஆறுதல் தேடி அவர் கெட்ட சகவாசம் வைத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலவரத்தில் ஈடுபட்டார். அக்குற்றத்திற்காக அவருக்கு சீர்திருத்தப் பயிற்சிக்கு செல்லும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

சீர்திருத்தப் பயிற்சி என்பது இளம் குற்றவாளிகளுக்கு ஆலோசனை வழங்கி, கடுமையான பயற்சிகள் ஆகியவற்றின் மூலம் அவர்களைச் சீர்திருத்தி நல்வழிப்படுத்துவதாகும்.

சீர்திருத்தப் பயிற்சியின் முடிவில் தங்கள் தண்டனைக் காலத்தை முடித்தவர்கள் கண்காணிப்பு ஆணையின்கீழ் சமூகத்தில் மீண்டும் காலடி எடுத்து வைக்கலாம்.

திரு ஃபை தமது ஆறு மாத தண்டனைக் காலத்தை இன்னும் நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார். ஆரம்பத்தில் சீர்திருத்தப் பயிற்சிக்கு செல்வது குறித்து தாம் கவலை கொண்டிருந்ததாக ஃபை தெரிவித்தார். ஆனால், அங்கு நடப்பில் உள்ள திட்டங்கள் தமது கடந்த காலத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கை தந்து உதவியதாகக் கூறுகிறார்.

ஃபை போன்ற இளம் குற்றவாளிகளுக்குச் சீர்திருத்தப் பயிற்சி உதவியுள்ளது.

இந்தப் பயிற்சி மேற்கொண்டவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் போக்கு தொடர்பான இரண்டாண்டு விகிதம் 2018ம் ஆண்டில் 28.8 விழுக்காட்டிலிருந்து 2021ம் ஆண்டில் 16.3 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் விளக்கினார்.

அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் சீர்திருத்தப் பயிற்சி மேற்கொண்டு வருவோர் தங்கள் பயிற்சிக்காலத்தை முடித்த நிகழ்ச்சியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) பங்கேற்றார்.

குறிப்புச் சொற்கள்