அதிக சிங்கப்பூரர்கள் இந்தியா பற்றி அறியவேண்டும்: அதிபர் தர்மன்

அதிக சிங்கப்பூரர்கள் இந்தியா பற்றி அறியவேண்டும்: அதிபர் தர்மன்

1 mins read
736d2e5e-c9f3-4bbc-8f22-8470690ee7aa
சிங்கப்பூர் - இந்திய உறவுகளையும் கடந்த பத்தாண்டில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியையும் பாராட்டினார் அதிபர் தர்மன். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 2

சிங்கப்பூர் - இந்திய உறவுகள் மேலும் துடிப்புடன் உள்ளன. எனினும், அதிகமான சிங்கப்பூரர்கள் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

பலதுறை தொழில் கல்லூரிப் படிப்பை முடித்ததும் சிங்கப்பூர் நிறுவனத்திற்காக இந்தியாவில் பணியாற்றிய சிங்கப்பூரரான ஆன்டி லிம்மை அவர் எடுத்துக்காட்டாகக் கூறி இளையர்களை இந்தியாவில் வாய்ப்புகளைத் தேட அதிபர் ஊக்குவித்தார்.

இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து குறித்து பதிவிட்ட அதிபர், இரு நாடுகளும் ஒத்துழைப்பு தொடர்பான புதிய முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன என்றார்.

கடந்த பத்தாண்டில் இந்தியாவின் ஆக முக்கியமான சாதனைகளில் ஒன்று, மில்லியன்கணக்கானோரை மேம்படுத்துவதாகும் என்றார் அவர்.

சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், தூய்மை ஆகியவை இந்தியாவில் மேம்பட்டுள்ளன. இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகப் பணம் அனுப்பவும் பெறவும் முடிகின்ற வகையில் வங்கிச் செயல்பாடுகளும் மின்னிலக்கமயமாகி உள்ளன என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்