தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் வரும் நாள்களில் காலையில் மழையை எதிர்பார்க்கலாம்

1 mins read
5da7af44-1789-49e9-b9d5-82768c013c94
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு காலை நேரங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

இரவு நேரங்களில் வெப்பம் சற்று அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அது தெரிவித்தது.

தென்கிழக்கு அல்லது தென் பகுதியில் இருந்து காற்று வீசும்போது அது கடலில் இருந்து சூடான காற்றை கொண்டுவரும் என்று ஆய்வகம் கூறியது.

அதனால் சில நாள்கள் இரவு நேரங்களில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசிற்கு மேல் பதிவாகக்கூடும்.

பெரும்பாலான நாள்களில் தினசரி வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும்.

சில நாள்கள் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையையும் காற்றையும் எதிர்பார்க்கலாம்.

பிற்பகல் நேரங்களிலும் சிறு மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

கடந்த மே மாதம் சிங்கப்பூரில் வெப்பநிலை அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெப்பநிலை 37 டிகிரி செல்சியசைத் தொட்டது.

குறிப்புச் சொற்கள்