தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலை நேர சாலை விபத்து; மருத்துவமனையில் இருவர்

1 mins read
36b500bb-1062-4b9c-a4a0-58632732683d
சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில், அங் மோ கியோ அவென்யூ 3 வெளிவாயிலுக்கு முன்னதாக நிகழ்ந்த விபத்து குறித்து காலை 6.05 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது. - படங்கள்: எஸ்ஜி ரோடு சாட், எஸ்ஜி ரோடு புளோக்ஸ்/டெலிகிராம்

மத்திய விரைவுச்சாலையில் புதன்கிழமை (மே 21) லாரியும் காரும் விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்து காரணமாக இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில், அங் மோ கியோ அவென்யூ 3 வெளிவாயிலுக்கு முன்னதாக நிகழ்ந்த விபத்து குறித்து காலை 6.05 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவத்தது.

விபத்தில் சிக்கிய காரை ஓட்டிய 23 வயது ஆடவரும் அவருடன் பயணம் செய்துகொண்டிருந்த 22 வயதுப் பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இருவரும் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

விபத்தில் சிக்கிய லாரியை ஓட்டிய 25 வயது ஆடவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார்.

விபத்து காரணமாக மத்திய விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரேடல் சாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக காலை 6.37 மணிக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

விபத்துக்குள்ளான லாரி பக்கவாட்டில் சாய்ந்துக் கிடப்பதைக் காட்டும் காணொளி டெலிகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்