சாலைச் சந்திப்பில் விபத்து: 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

சாலைச் சந்திப்பில் விபத்து: 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
cb714201-12fe-460c-9ced-bbc625b99dbd
விபத்தில் 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார். - படம்: ஷின் மின் டெய்லி நியூஸ்

தனியார்ப் பேருந்து ஒன்றோடு மோதியதில் 23 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

விபத்து ஜூன் 15ஆம் தேதி இரவு 7.40 மணியளவில் பென்கூலன் ஸ்திரீட், ஸ்டாம்ஃபோர்ட் ரோடு சாலைச் சந்திப்பில் நடந்ததாகக் கூறப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு மோட்டார்சைக்கிளோட்டி கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பின்னர், மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

அவருடன் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த 22 வயது பெண் சுயநினைவுடன் இருந்தார்.

உயிரிழந்தவரும் அந்தப் பெண்ணும் தம்பதியர் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மைய வாரங்களில் குறைந்தது இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் விபத்தில் சிக்கி மாண்டனர்.

மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களின் பயணிகளும் உயிரிழந்த சம்பவங்கள் 2023ஆம் ஆண்டு 44.7% அதிகரித்திருந்ததாகக் காவல்துறையினர் வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்