தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவுச் சாலையில் விபத்து; 28வயது ஆடவர் மரணம்

1 mins read
412d1833-c47f-4a76-b5c2-ab50248f796d
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது. - படங்கள்: சமூக ஊடகம்/ எஸ்ஜி ரோட்பிளாக்ஸ்

தெம்பனிஸ் விரைவுச்சாலையில் செப்டம்பர் 11ஆம் தேதி மோட்டார் சைக்கிளும் சரக்கு வாகனமும் மோதிக்கொண்ட விபத்து நேர்ந்தது.

அதில் 28 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து இரவு 10.25 மணிக்கு தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கி செல்லும் தெம்பனிஸ் விரைவுச்சாலையில் பொங்கோல் முடிவுக்குமுன் விபத்து ஏற்பட்டது.

42 வயது சரக்கு வாகன ஓட்டுநர் விசாரணைக்கு உதவிவருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 136 பேர் உயிரிழந்தனர். 2022ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 108ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்