மெக்பர்சன் வட்டாரத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று எஸ்ஜி ரோடு விஜிலாண்டே என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
அப்பர் அல்ஜுனிட் ரோடும் மெக்பர்சன் ரோடும் சந்திக்கும் இடத்தில் வலது பக்கமாக கார் திரும்பியபோது மோட்டார்சைக்கிளுடன் மோதல் ஏற்பட்டதை அதில் காணமுடிந்தது.
மோட்டார் சைக்கிளை ஓட்டியவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் காருக்கு மேல் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர்.
39 வயது ஓட்டுநரும் 19 வயது பின்னிருக்கைப் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
விபத்து நிகழ்ந்த விதம் குறித்த விசாரணையில் 61 வயது கார் ஓட்டுநர் உதவி வருவதாகவும் அது தெரிவித்தது.
சனிக்கிழமை (ஜூன் 22) பிற்பகல் 3.10 மணியளவில் விபத்து பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
கடந்த ஆண்டு நிகழ்ந்த போக்குவரத்து விபத்துகளில் 136 பேர் உயிரிழந்தனர். 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் அது 25.9 விழுக்காடு அதிகம். அந்த ஆண்டில் 108 பேர் விபத்துகளில் உயிரிழந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
உயிரிழந்தவர்களில் பாதிப்பேர் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னிருக்கைப் பயணிகள். அதேபோல மரணமடைந்தோரில் கிட்டத்தட்ட 20 விழுக்காட்டினர் சாலையைக் கடந்த மூத்தோர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

