கிராஞ்சி விரைவுச்சாலையில் லாரி, கனரக வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்து அக்டோபர் 23ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
காலை 7 மணி அளவில் தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் கிராஞ்சி விரைவுச்சாலையில் செஞ்சா சாலை நுழைவாயிலுக்கு முன்னதாக விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
52 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்துக்காக 24 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சாலையின் முதல் தடத்தில் சென்றுகொண்டிருந்த லாரி இடது பக்கம் இருந்த தடத்துக்கு மாற முற்பட்டபோது அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அது மோதியது.
இதையடுத்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்த ஆடவர் தமது வாகனத்திலிருந்து விழுந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கனரக வாகனத்துக்கு முன் அவர் விழுந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.