அட்மிரல்ட்டி சாலையில் நிகழ்ந்த விபத்தில் 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டார். இந்த விபத்து வெள்ளிக்கிழமை (ஜூன் 20) பிற்பகல் நடந்தது.
அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கனரக வாகனம், ஒரு லாரி ஆகியவை சிக்கின.
உட்லண்ட்ஸ் சென்டர் சாலையை நோக்கிச் செல்லும் அட்மிரல்ட்டி சாலையில் விபத்து நிகழ்ந்ததாகப் பிற்பகல் 3.15 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை கூறியது.
சாலையில் கிடந்த ஆடவரின் உடலை மருத்துவ உதவியாளர்கள் வெள்ளை துணியால் போர்த்தியதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
சம்பவ இடத்தில் ஆம்புலன்சும் காவல்துறைக்குச் சொந்தமான பல வாகனங்களும் இருந்தன.
இன்னொரு மோட்டார் சைக்கிளோட்டி உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த 56 வயது ஆடவர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
அதே நாளன்று பிற்பகல் நேரத்தில் பிடோக் வட்டாரத்திலும் புக்கிட் பாத்தோக் வட்டாரத்திலும் சாலை விபத்துகள் நிகழ்நதன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் நான்கு ஆடவர்கள் காயமடைந்தனர்.