தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங்கில் விபத்து: மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

1 mins read
18811663-2fcf-4477-bd15-71014d517b7e
ஜூரோங்கில் நடந்த விபத்தில் வேன் ஒன்றும், மோட்டார்சைக்கிள் ஒன்றும் சம்பந்தப்பட்டிருந்தன. - படம்: சிங்கப்பூர் ரோட்ஸ் ஆக்சிடென்ட்.காம் /ஃபேஸ்புக்

வேன் ஒன்று சம்பந்தப்பட்ட விபத்தில் 33 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

ஜாலான் பூன் லேயை நோக்கிச் செல்லும் ஜாலான் துக்காங்கில் வேன் ஒன்றும், மோட்டார்சைக்கிள் ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தங்களுக்கு ஜூலை 20ஆம் தேதி மாலை 4.45 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.

பெண் மோட்டார்சைக்கிளோட்டியின் மரணம் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்யப்பட்டது. 53 வயது ஆண் வேன் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.

வேனின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டெடுத்து, அவரை இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

லேசாகக் காயமுற்ற மற்றொருவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

ஜூலை 20ஆம் தேதி நேர்ந்த மரணம் விளைவித்த மூன்றாவது சாலை விபத்து இது.

குறிப்புச் சொற்கள்