சிலேத்தார் விரைவுச்சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

சிலேத்தார் விரைவுச்சாலை விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழப்பு

1 mins read
0f825570-db41-499a-b79a-cad375fd192f
தீவு விரைவுச்சாலை, தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நடந்த விபத்தில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார். - படம்: ஃபரிசாத்துல் ஃபிர்டாவோஸ்/ஃபேஸ்புக்

சிலேத்தார் விரைவுச்சாலையில் புதன்கிழமை (ஜூலை 29) காலை நடந்த விபத்தில் 24 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்துக் காலை 9.50 மணியளவில் காவல்துறையினருக்கும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார்சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் உறுதிப்படுத்தினார்.

விபத்து தொடர்பான காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. விரைவுச்சாலையின் இடப்புறத் தடங்கள் இரண்டில் மோட்டார்சைக்கிள் விழுந்து கிடப்பதும் அந்தத் தடங்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதையும் காட்டிய காணொளியில் நீல நிறக் காவல்துறைக் கூடாரமும் காணப்பட்டது.

விபத்து உட்லண்ட்ஸ் அவென்யூ 12க்கு அருகே நடந்ததாக அக்காணொளியின் விளக்கப் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்