கிளமெண்டி நகர மையத்தில் உள்ள ஒரு காப்பி கடை அருகே ஜூலை 28 அன்று இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, 83 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு உதவுகிறார்.
விபத்தில் சிக்கிய 26 வயதுடைய பெண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர்.
ஜூலை 28ஆம் தேதி மாலை சுமார் 6.35 மணிக்கு புளோக் 449, கிளமெண்டி அவென்யூ 3க்கு அருகில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்குப் பிந்தைய நிகழ்வுகளின் புகைப்படம், கிளமென்டியில் உள்ள புளோக்குகள் 451, 449க்கு இடையிலான பாதசாரி கடக்கும் இடத்தில் விபத்து நடந்ததாகக் காட்டுகிறது.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

