லாரியுடன் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

தீவு விரைவுச்சாலையில் விபத்து

லாரியுடன் மோதிய விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி மரணம்

காணொளிப் படம்: ஹோ போ, ஃபேஸ்புக்

02 Oct 2026 - 3:01 pm

1 mins read

தீவு விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (அக்டோபர் 1) லாரியுடன் மோதிய விபத்தில் கடுமையாகக் காயமுற்ற மோட்டார்சைக்கிளோட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

காலை மணி 9.50க்கு விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

நினைவிழந்த நிலையில் 28 வயது மோட்டார்சைக்கிளோட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

லாரி ஓட்டுநரான 48 வயது ஆடவர் விசாரணையில் உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

சம்பவ இடத்தில் காவல்துறை வாகனங்களும் இழுவை வாகனங்களும் இருப்பதை ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட படங்களில் காண முடிகிறது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் சாலைப் போக்குவரத்து விபத்துகளும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளைவிடத் தொடர்ந்து அதிகரிப்பதைக் காட்டுகின்றன.

காயங்களை ஏற்படுத்திய போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டின் முற்பாதியில் 3,748ஆக இருந்தது. அது இவ்வாண்டின் அதே காலத்தில் 3,869ஆகக் கூடியுள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் 4,894ஆக இருந்தது. அது போன ஆண்டின் அதே காலத்தில் 5,090ஆக அதிகரித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்