ஈசூன் வட்டாரத்தில் நிகழ்ந்த விபத்தில் தொடர்புடைய 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கார் ஒன்று சம்பந்தப்பட்ட அந்த விபத்து வியாழக்கிழமை (ஏப்ரல் 10) மாலை ஈசூன் அவென்யூ 5, ஈசூன் ரிங் ரோடு சந்திப்பில் நிகழ்ந்தது.
அந்தச் சந்திப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதுவதைக் காணொளி ஒன்று காட்டியது. பின்னர் அந்த காரில் இருந்து ஆடவர் ஒருவர் வெளியேறியதையும் அதில் காணமுடிந்தது.
விபத்து தொடர்பில் சம்பவத்தன்று மாலை 6.10 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய காவல்துறை, மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் தெரிவித்தது.
அந்த விபத்து பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.