மது அருந்திவிட்டுக் குடிபோதையில் வாகனம் ஓட்டியதன்பேரில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜூன் 19) குற்றம் சாட்டப்பட்டார்.
2022 அக்டோபர் 26ல் ஈசூன் அவென்யூ 3க்கும் செம்பவாங் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் சிவப்பு விளக்கிற்கு நிற்காமல் வாகனத்தை ஓட்டுநர் ஹெங் ஸென் அன், 35, குற்றஞ்சாட்டப்பட்டார்.
மின்னேற்றம் செய்யப்பட்ட சைக்கிளுடன் ஹெங்கின் கார் மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்தில் 32 வயது ஆண் சைக்கிளோட்டி காயமடைந்தார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் தொடர்பிலும் ஹெங் குற்றம் சாட்டப்பட்டார்.
2024 ஜூலை 6ல் மதுபோதையில் ஹெங் வாகனம் ஓட்டியதன் தொடர்பில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார். பீஷான் ஸ்ட்ரீட் 22ல் காலை 5 மணிக்கு முன்னதாக அந்த விபத்து நேர்ந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹெங்கின் வழக்கு ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக முதன்முறை குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தொடர்ந்து குற்றம் புரிவோர்க்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் 20,000 வெள்ளி வரை விதிக்கப்படலாம்.