தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் இரண்டு புதுமுகங்கள் மோதியதில் மசெக வேட்பாளர் வெற்றி

1 mins read
06662838-8bad-433e-af32-19242f45bb53
மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக்காகக் களமிறங்கிய கோ ஸி கீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

யுகேஷ் கண்ணன்

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியில் மசெக வேட்பாளரான கோ ஸி கீ, தனது முதல் தேர்தலில் 62% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஜெரமி டான் 38% வாக்குளைப் பெற்றார்.

இத்தொகுதியில் மொத்தம் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 22,754.

கோ ஸி கீ, ஆசியாலீகல் நிறுவனத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். மேலும், புக்கிட் தீமா குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் துணை தலைவராகவும் மசெகாவின் புக்கிட் தீமா கிளையின் செயலாளராகவும் சேவையாற்றி உள்ளார்.

இவரது போட்டியாளர் ஜெரமி டான், டிஷ்ஷுஎஸ்ஜி நிறுவனத்தின் நிறுவனராவார். இவர் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி பயன்பாட்டைப் பெரிதும் ஆதரிப்பவர்.

இத்தொகுதியில் சென்ற தேர்தலில் போட்டியிட்ட மசெகவின் லிம் பியோவ் சான் 73.82% வாக்குகளுடன் மக்கள் குரல் கட்சி வேட்பாளர், சிவகுமார் செல்லப்பாவை வென்றார். 2020ஆம் ஆண்டில் ஆக அதிக வாக்குகளை வென்றவர்களில் அவரும் ஒருவர்.

நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றிய லிம் பியோவ் சான் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி 2011ஆம் ஆண்டு மரின் பரேட் குழுத் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்