கட்டுமானப் பணிகளால் தமக்குச் சொந்தமான 700 ஆமைகளும் அபாயத்தில் உள்ளதாக ‘லைவ் டர்ட்டல் மியூசியம்’ உரிமையாளர் திருவாட்டி கோன்னி டான் கூறினார்.
குரங்குகள், உடும்புகள், நீர்நாய்கள், எலிகள் போன்ற விலங்குகள் ஆமைகள் உள்ள இடத்திற்கு வருவதாகவும் ஆமைகளைத் தாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈசூனிலுள்ள லோரோங் சென்சாருவில் ‘லைவ் டர்ட்டல் மியூசியம்’ ஆமை அரும்பொருளகம், லாப நோக்கற்ற அமைப்பான ‘கிரவுண்ட்-அப் இனிஷியேட்டிவ்’ இரண்டும் அமைந்துள்ளன.
அவை இரண்டுக்கும் ‘ஹோம்டீம்என்எஸ் காத்திப்’ எதிரே உள்ள 1.2 ஹெக்டர் பரப்பளவு நிலத்தில் மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தடங்கலால் அங்கு மாற முடியாத நிலையில் இரண்டும் தற்போது சிக்கியுள்ளன.
இதற்கிடையே, இரண்டும் செப்டம்பர் 2024 வரை லோரோங் சென்சாருவில் செயல்பட அனுமதிக்கப்படும்.