வழிகாட்டி நாய்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் இயக்கம்

வழிகாட்டி நாய்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் இயக்கம்

1 mins read
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முயற்சி
7f00d4b3-88df-481a-9848-e5ce29b6a940
முயற்சியை மேற்கொண்ட நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவிகள் (இடமிருந்து) ருத் லூ ஹுய் என், டான் ச வெய், ஜேமி டான் யி சின், ஜின் சியுஹுய். - படம்: பாஃபெ‌ஷனல்ஸ்

கண் தெரியாதோருக்கு உதவியாக விளங்கும் வழிகாட்டி நாய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றைப் பிறர் ஏற்றுக்கொள்ளச் செய்யவும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள், இயக்கம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அத்தகைய வழிகாட்டி நாய்களை வைத்துக்கொள்வதற்கான காரணங்கள், அவை சார்ந்த விதிமுறைகள் ஆகியவற்றின் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அம்முயற்சியின் இலக்கு. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வீ கிம் வி தொடர்பு, தகவல் பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் சென்ற ஆண்டு இறுதியிலிருந்து இவ்வாண்டு மார்ச் மாதம் வரை அந்த இயக்கத்தை நடத்தினர்.

வழிகாட்டி நாய்கள், உடற்குறையுள்ளோருக்கு உதவியாக இருக்கப் பயிற்சி பெற்றவையாகும். அதுவே, செல்லப் பிராணிகளாக வைத்துக்கொள்ளப்படும் நாய்களுக்கும் வழிகாட்டி நாய்களுக்கும் உள்ள வித்தியாசம்.

திருவாட்டி ஜேமி டான் யி சின், திருவாட்டி ருத் லூ ஹுய் என், திருவாட்டி டான் ச வெய் (மூவருக்கும் வயது 23), திருவாட்டி ஜின் சியுஹுய், 25, ஆகியோர் அந்த விழிப்புணர்வு இயக்கத்தை நடத்திய நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.

எம்ஆர்டி நிலையங்கள், உணவங்காடிகள் போன்ற இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது, இன்ஸ்டகிராம், டிக்டாக்கில் பதிவுகளையும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் இயக்கத்தை நடத்தினர்.

‘பாஃபெ‌ஷனல்ஸ்’ (Pawfessionals) என்று தங்கள் குழுவை அழைத்துக்கொள்ளும் அவர்கள், தாங்கள் மேற்கொண்ட தொடர்பு சார்ந்த பட்டக் கல்வியின் இறுதியாண்டுத் திட்டத்துக்காக அந்த இயக்கத்தை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்