தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேன்- கனரக வாகனம் மோதல்; ஒருவர் மரணம்

1 mins read
982a007f-3d61-4372-ae0b-14183c76dd78
படம்: SG ROAD/TELEGRAM -

தீவு விரைவுச்சாலையில் வேன் மற்றும் கனரக வாகனம் மோதிய விபத்தில் 26 வயது ஆடவர் மாண்டார்.

மாண்ட நபர் வேனில் இருந்த ஓட்டுநர். அவர் பொருள்களை நகர்த்தும் நிறுவனத்தில் வேலை செய்பவர்.

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (ஏப்ரல் 17) பிற்பகல் 2:35 மணிவாக்கில் விபத்து நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது.

விபத்து தொடர்பான காணொளியும் சமூகஊடகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

மாண்ட நபர் வேனின் இருக்கையில் சிக்கிக்கொண்டதாகவும் அவரை மீட்க மீட்புக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுய நினைவு இல்லாமல் இருந்த ஆடவரை எங் தெங் ஃபாங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் காயங்களால் மாண்டார்.

விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துவேன்