‘கிரேப்’ நிறுவனத்தில் இருந்து விலகுகிறார் டின் பெய் லிங்

‘கிரேப்’ நிறுவனத்தில் இருந்து விலகுகிறார் டின் பெய் லிங்

1 mins read
66188fb9-1790-4ccb-b7c4-7c82089fa2fe
நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் (நடுவில்) ‘கிரேப்’ நிறுவனத்தில் தமக்கு விலைமதிப்பற்ற அனுபவம் இருந்ததாகக் கூறினார். - படம்: பெய் லிங் டின்/லிங்க்ட்இன்

‘கிரேப் சிங்கப்பூர்’ நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறார் நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங்.

அந்நிறுவனத்தில் நிறுவன மேம்பாட்டுப் பதவி ஒன்றில் சேர்ந்த கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் அவரது பதவி விலகல் பற்றிய தகவல் வந்துள்ளது.

திருவாட்டி டின் வரும் அக்டோபர் மாதம் முதல் தேதி, நிதித் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் சேரவிருப்பதாக தமது ‘லிங்க்ட்இன்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிறுவனத்தில் உத்திபூர்வ பங்காளித்துவங்களிலும் வர்த்தக மேம்பாட்டிலும் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அவரைத் தொடர்புகொண்டபோது, தாம் சேரவிருக்கும் நிறுவனத்தின் பெயரையோ அது உள்ளூர், வெளியூர் அல்லது இந்த வட்டாரத்தில் உள்ள நிறுவனமா என்பதையோ தெரிவிக்க திருவாட்டி டின் மறுத்துவிட்டார்.

திருவாட்டி டின் தன் நிறுவனத்திலிருந்து விலகுவதை ‘கிரேப்’ உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்