தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேலாளர்கள் அல்லர்: லியோங் மன் வாய்

2 mins read
a4db7195-d16e-4753-913c-be6c17107fe5
லேக்சைட் எம்ஆர்டி நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) சிங்கப்பூர் முன்னேற்றயின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் மேற்கொண்ட தொகுதி உலாவில் கட்சியின் துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியப் பணி கொள்கை விவாதங்களில் பங்கேற்பதுதானே தவிர, உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி குடியிருப்புப் பகுதிகளில் மேலாளர் வேலை பார்ப்பது மட்டும் அல்ல என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தலைமைச் செயலாளர் லியோங் மன் வாய் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) கூறினார்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் டெஸ்மண்ட் லீ முன்னதாக கூறியதற்கு திரு லியோங் பதிலளிக்கும் விதமாக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரு டெஸ்மண்ட் லீ, போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் குடியிருப்பாளர்கள் தங்கள் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சிக் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள திரு டெஸ்மண்ட் லீ அங்கு மசெக என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளது என்பதை விவரித்திருந்தார்.

அதில் குடும்பங்கள் வாழ்க்கைச் செலவினத்தை சமாளிக்க தேசிய அளவில் வகுக்கப்பட்ட திட்டங்களுடன் தமது தொகுதிக்குட்பட்ட திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், வேலை தேடுவோருக்கு சமூகத்தில் கூடுதல் வாழ்க்கைத் தொழில், திறன் கண்காட்சிகளுக்கும் தான் ஏற்பாடு செய்ய உள்ளதாகக் கூறினார்.

“குடியிருப்பாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதுடன் அவற்றை எவ்வாறு தேசிய அளவில் கொள்கைகளாக வகுப்பது என்பது குறித்தும் விவாதிப்போம்,” என்று அந்தத் தொகுதியில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் ஐந்து வேட்பாளர்களில் ஒருவரான திரு லியோங் விளக்கினார்.

“வெஸ்ட் கோஸ்ட் தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் வலம் வந்துள்ளோம். இதில் சில பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளோம். இதற்குப் பின்னும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்