அக்டோபர் 11, நவம்பர் 22 ஆகிய சனிக்கிழமைகளில் வட்டப் பாதை எம்ஆர்டி ரயில் சேவை வழக்கத்தைவிட முன்னதாகத் தொடங்கும்.
இவ்விரு நாள்களிலும் வட்டப் பாதையில் ரயில் சேவை காலை 7.30 மணிக்குத் தொடங்கும்
செப்டம்பர் 5லிருந்து டிசம்பர் 28 வரை சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வட்டப் பாதையில் ரயில் சேவை காலை 9 மணிக்குத் தொடங்கிறது.
வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் இரவு 11 மணியுடன் ரயில் சேவை நிறைவடைகிறது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க அக்டோபர் 11ஆம் தேதியிலும் நவம்பர் 22ஆம் தேதியிலும் காலை 7.30 மணிக்கு ரயில் சேலை தொடங்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை (அக்டோபர் 1) தெரிவித்தது.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்ட நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
அதற்கு முன்னதாக வட்டப் பாதையில் ரயில் இயங்குமுறையின் ஒருங்கிணைப்பைச் சோதனை செய்ய ரயில் சேவை முன்னதாகத் தொடங்கிவைக்கப்படுவதாக ஆணையம் கூறியது.
அக்டோபர் 3 - 5, நவம்பர் 28 - 30, டிசம்பர் 5 - 7 ஆகிய வார இறுதி நாள்களில் வழக்கமான நேரத்தில் ரயில் சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.