வடக்கு-தெற்கு ரயில் பாதையில், சமர்செட் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே தடத்தில் ஏற்பட்டுள்ள பழுதால் தோ பாயோ நிலையம் முதல் சமர்செட் நிலையம் ரயில் வரை பயணங்கள் ஏறத்தாழ 10 நிமிடங்கள் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலையில் 9 மணியளவில், சிவப்பு ரயில் பாதையில் தாமதம் பற்றிய அறிவிப்பு ஒலித்தது.
மரினா சவுத் பியர் நிலையத்தை நோக்கிச் செல்லும் ரயில்கள், தோ பாயோ நிலையத்திற்கும் சமர்செட் நிலையத்திற்கும் இடையே தாமதத்தை எதிர்பார்க்கலாம் என்று எஸ்எம்ஆர்டி, சமூக ஊடகங்களில் தெரிவித்தது.
கூடுதல் பயண நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் திட்டமிடுமாறு எஸ்எம்ஆர்டி கேட்டுக்கொண்டது.
ரயில் சேவை காலை 9:50 மணியளவில் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளதாக எஸ்எம்ஆர்டி காலை 10.21 மணிக்கு தெரிவித்தது.