வடக்கு-தெற்கு ரயில் தடத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8ஆம் தேதி) காலை பயணம் செய்தவர்கள் ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்களின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. ரயில் தடக் கோளாறு காரணமாக தோ பாயோ, நிலையத்திலிருந்து சாமர்செட் நிலையம் வரை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை கிட்டத்தட்ட 9.05 மணிக்கு வடக்கு-தெற்கு தடத்தில் பயணம் செய்வோர் தோ பாயோ, சாமர்செட் நிலையங்களுக்கு இடையே, மரினா சவுத் நிலையம் நோக்கிச் செல்வோர் தங்களது பயண நேரத்தில் கூடுதலாக 10 நிமிடங்களைச் சேர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
பின்னர் காலை 9.44 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது ஃபேஸ்புக்கில் பயணிகள் இந்த ஐந்து ரயில் நிலையங்களுக்கு இடையேயான பயண நேரத்தில் கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்த்துக்கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, காலை 9.57 மணிக்கு ரயில் சேவை வழக்கநிலைக்கு திரும்பியதாக கூறப்பட்டது.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் செவ்வாய்க்கிழமை காலை ஏறத்தாழ 10.21 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காலை சுமார் 8.45 மணிக்கு ஆர்ச்சர்ட் ரயில் நிலையத்துக்கு அருகே, நகர மையத்தை நோக்கிச் செல்லும் தடத்தில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து கோளாறு குறித்து ஆய்வு செய்ய தனது ஊழியர்கள் அங்கு சென்றதாகக் கூறியது.
இதைத் தொடர்ந்து தோ பாயோவிலிருந்து சாமர்செட் வரை செல்லும் ரயில் பயணிகள் தங்கள் பயண நேரத்தில் கூடுதலாக 15 நிமிடங்கள் சேர்த்துக் கொள்ளும்படி எஸ்எம்ஆர்டி நிறுவனம் ரயில் பயணிகளைக் கேட்டுக்கொண்டது.
கூடுதல் பயண நேரத்துக்கு பயணிகளிடம் மன்னிப்புக் கோருவதுடன் தங்கள் நிலைமையைப் புரிந்துகொள்ளும்படியும் அது கேட்டுக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, 9.57 மணிக்கு ரயில் சேவை வழக்கநிலைக்கு திரும்பியதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.