மத்திய கிழக்குப் பயண ரத்து: டிசம்பர் வரை நீட்டித்த எஸ்ஐஏ, ஸ்கூட் நிறுவனங்கள்

மத்திய கிழக்குப் பயண ரத்து: டிசம்பர் வரை நீட்டித்த எஸ்ஐஏ, ஸ்கூட் நிறுவனங்கள்

படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

01 Oct 2026 - 7:05 pm

1 mins read

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), அதன் மலிவுக் கட்டணச் சேவையான ஸ்கூட் ஆகிய இரு நிறுவனங்களும் மத்திய கிழக்கு செல்லும் அதன் குறிப்பிட்ட விமானப் பயணங்களின் ரத்தை டிசம்பர் மாதம் வரையில் நீட்டித்துள்ளதாக அறிவித்தன.

சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் எஸ்கியூ494, துபாயிலிருந்து சிங்கப்பூர் வரும் எஸ்கியூ495 ஆகிய விமானப் பயணங்கள் டிசம்பர் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் என்று வியாழக்கிழமை (அக்டோபர் 1) எஸ்ஐஏ தெரிவித்தது.

சிங்கப்பூரிலிருந்து ஜெட்டா செல்லும் டிஆர்796, ஜெட்டாவிலிருந்து சிங்கப்பூர் வரும் டிஆர்797 ஆகிய விமானப் பயணங்கள் டிசம்பர் 2ஆம் தேதி வரை ரத்தாகும் என்று ஸ்கூட் நிறுவனம் புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தது.

மத்திய கிழக்கு போருக்கு முன்பாக எஸ்ஐஏ நிறுவனம் துபாய் நகருக்கு அன்றாடம் விமானப் பயணச் சேவையை வழங்கி வந்தது. ஜெட்டாவுக்கு வாரம் மூன்று முறை ஸ்கூட் பயணங்களை மேற்கொண்டது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஏற்கெனவே பல பயணங்களை எஸ்ஐஏ நிறுத்தி வைத்திருந்ததன் தொடர்ச்சியாக தற்போதைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விமானப் பயணங்கள் குறித்த ஆக அண்மைய நிலவரங்களை அறிந்துகொள்ள அதன் இணையப் பக்கத்தைப் பார்க்கும்படி எஸ்ஐஏ பயணிகளைக் கேட்டுக்கொண்டது.

ரத்தான பயணங்களால் பாதிக்கப்பட்ட பயணிகள் பயன்படுத்தப்படாத பயணச்சீட்டுக்கான முழுக் கட்டணத்தைத் திரும்பப் பெற கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
எஸ்ஐஏசாங்கி விமான நிலையம்விமானப் பயணம்பயணிகள்கட்டணம்ரத்துமத்திய கிழக்குதுபாய்ஸ்கூட்