தெளிவற்ற நீரில் பவளங்களால் நன்கு பெருக முடியும் என்றபோதிலும் நிலத்திலிருந்து கடலுக்குள் செல்லும் சேறு அவற்றை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
எதிர்காலக் கடலோர மேம்பாட்டுப் பணிகள், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்த அபாயநிலை ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவளப் பாறைகள் மீது சேறு படர்ந்திருந்தால் பவளங்கள் அழியக்கூடும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (என்டியு) சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவுகள் ‘மரின் பொலுஷன் புல்லட்டின்’ சஞ்சிகையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரின் தென்தீவுகளில் உள்ள ஆறு பவளப் பாறைகள் ஆய்வு செய்யப்பட்டன.
தென்கிழக்காசியாவில் கடலோரப் பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் அதிகம் நடைபெறுவதால் தற்போது ஆரோக்கியமாக, செழிப்பாக இருக்கும் பவளப் பாறைகள் எதிர்காலத்தில் பாதிப்படையக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவளங்கள் அவற்றின் திசுக்களிலிருந்து பாசிகளை வெளியேற்றுவதுண்டு.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு நிகழும்போது அவை பலவீனமடையும்.
அப்போது, பவங்களின் மேல் சேறு படரும்போது பவளங்களால் விரைவில் மீண்டு வர முடியாத நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

